×

2022-2023 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.15% ஆக உயர்த்தி வழங்க ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல்..!!

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி ஒன்றிய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் இருந்து இதன் பயனை சந்தாதரர்கள் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி என்பது ஒவ்வொரு மாதமும் தங்கள் ஓய்வூதிய நிதியின் ஒரு பகுதியை பங்காளிக்கக்கூடிய ஊழியர்களுக்கான அரசு நிர்வகிக்கப்பட்ட ஓய்வூதிய சேமிப்பு திட்டம். 2021-2022இல் செய்யப்பட்ட டெபாசிட்டுகளுக்கான இ.பி.எஃப் வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டது. இதுவே இதுவரை இல்லாத குறைந்த பிஎஃப் வட்டி விகிதமாகும். இதையடுத்து, 2021-2022 இல், EPFO வட்டி விகிதம் 8.5% ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக EPFO விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வந்தன. 2019-2020 நிதியாண்டில் மார்ச் 2020இல் அறிவிக்கப்பட்ட EPFO வட்டி விகிதம் 8.5% ஆகும்.

2018-2019 நிதியாண்டில், இ.பி.எஃப் விகிதம் 8.65% ஆக இருந்தது. 2013-14 இல், EPFO 8.75% வட்டி விகிதத்தை வழங்கியது. கொரோனா பெருந்தொற்றின் எதிரொலியாக கடந்த மார்ச் 2022ல், 2021-2022ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டது. தற்போது 2022 – 2023ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ.பி.எஃப் வட்டி விகிதத்தை 8.10% இருந்து 8.15% ஆக உயர்த்தி ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பிஎஃப் வட்டி விகிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post 2022-2023 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.15% ஆக உயர்த்தி வழங்க ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Union Ministry of Finance ,Delhi ,Union Finance Ministry ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...